மகா

June 8, 2019
மார்பில் உறங்கும் எனது பத்து மாத மனதே 
எனது கனவுகளில் முளைத்த முத்தே
எனது கண்ணீர் துடைத்த கண்ணே
மூதுரையை மழலையில் இழைத்த பெண்ணே
எனது செல்லம் நீயல்லவோ  
எனது சிட்டு நீயல்லவோ
துயரமெல்லாம் ஏணியாக்கி உனதுடன் உயரம் போகும்
எனது பயணம்  ஆரம்பமாகி சில மணி நேரம் கூட ஆகல
எதிர்பார்த்த அன்பெல்லாம்
கானல் நீராகி போன போதும்
கடல்களாய் இதோ என் அன்பு
என் குட்டி மீனு நீ
சிரிது காலம் மீன் தொட்டிக்குள் 
நீ நீந்திரிவ எனக்குத் தெரியும்


மீனுக்கு சிறகு முளைச்சு
நீயா வருவியானு
கண்ணீரெல்லாம் வற்றி போய் என் முத்த வானம்
காத்திகிட்டிருக்கு  
அம்மா என்ற குரல் கேட்க என் பித்து மனம்
காத்திருக்கு

அம்மா இல்லா அனாதை சொல்ல கேட்டிருப்ப
அம்மாவ அனாதையாக் கும் சொல்ல கேட்காத

என் அம்மா என் அம்மானு உன் கண்களில் கோடி நட்சத்திர்த்தப் பார்க்க இந்த இருண்ட அம்மா காத்திருக்கேன்

 

அறத்தின் ஒளி

June 8, 2019

 

பெயன்ட்டர் ஆப் தி வின்ட்

October 1, 2011
 மற்ற கொரியன் நாடகங்களிலிருந்து சிறிது மாறுபட்ட நாடகம் அதிகம்.பொதுவாக கொரியன் நாடக பிரியர்கள்  அதன் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நட்பு, நிறைய காதல் கொஞ்சம் சோகம் இவற்றால் கவரப்படிருப்பர்.இதில் இன்னொரு வகை ஓவியத்தின் அழகுணர்ச்சியும்,அவர்களது கலாச்சாரமும் அதிகமாய் ஈர்த்து விடும் .இதில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நூறு சதவிகிதற்கும் மேலாக ரசிகர்களாய் உணர்ந்து கொண்டிருப்போம்.நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் பலரை,

    

 1)ஒவியார்களாக்கி இருக்கும் 2)படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும்  மரியாதையை ஏற்படுத்தி இருக்கும்  3)நமக்கு ஏன் ஓவியத்திறமை இல்லை என்று வருந்த வைத்திருக்கும்.

    இதில்  ஒரு பெண்தான் ஹீரோ .அதுவும் நமது மூன் கங் எங் அதாங்க மை லிட்டில் பிரைட்,இந்த பெண்ணின் நடிப்பால் நம்மை மறுபடியும் ஈர்த்துவிட்டார்.ஓவியருக்கு பிறந்த ஓவியம் ...துடுக்கான ஓவிய பள்ளி மாணவன்,ஏன் அவள் மாணவன் ஆனான் எப்படி ஒரு ஓவியம் அவள் வாழ்கையை எனும் கப்பலை திசை திருப்புகிறது ,ஒளி விளக்காய் ஒரு ஆசிரியர் கிடைக்க போய் சேர வேண்டய இடத்திற்குத்தான் போய் சேர்ந்ததா என்பது தான் கதை.

    ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாய் வாழ்ந்திருக்கின்றன.ஆர்ப்பாட்டமாய் முகபாவனைகளும் சம்பந்தம் இல்லாத உரத்த உரையாடல்களும் இந்த நாடகத்தில் இல்லவே இல்லை.

     இதில் அனைவரும் நடிப்புமே எதார்த்தமே ......இதில் நட்பு,காதல்,பாசம்,குரு பக்தி  என்று உறவுகளின் அனைத்து உன்னத உணர்ச்சிகளுக்கும் உயிர் தந்திருக்கிறார்கள்.அவர்களது பண்டைய கலாசாரத்தின் மீது நம் மதிப்பு இன்னும் உயர்கிறது

இதன் கதை உங்களுக்கு ஆயிரம் தளங்களில் கிடைக்கும்.அதனால் நான் சொல்லவில்லை.இந்த நிமிடம் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்த நாடகம் பார்க்கபட்டு கொண்டிருக்கும்.



1)சின் யூன்புக்காக நடித்திருக்கும் நமது குட்டி பெண்(துடுக்கான பார்வையும்,ஓவியம் வரையும் பொழுது தெரியும் ஆர்வமும்,பெண்ணாக வெட்கப்படும் நேரங்களிலும் ..இந்த மாடர்ன் ஆர்ட் மீது நமக்கு ஈர்க்கிறது).

2)சின் யுன் மீது காதலில் விழும் அழகும் திறமையும் நிறைந்த விலை மாது(அழகாக இருக்கிறது அவரது மொழியும் ,பாவனைகளும் இந்த அழகிய பெண் ஓவியத்தின் மீது காதலும் இரக்கமும் ஏற்படுத்துகிறது ).3)வில்லியாக வரும் மா மா (ஆர்பாடமில்லாமல் கண்களிலும் உதடுகளிலும் வெறுப்பை எற்படுதிருக்கிறார்). 

4)சின் யூன் புக்கின் அண்ணன் (குட்டிபெண்ணுக்கு அரணாகவும்,தங்கைக்காக தந்து உயிரையும் கொடுத்து நமது அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார்).

5) வாத்தியார்  சின் யுங் (திறமையை  மதிக்கும் திறமை சாலியான  குரு,அரசரிடம் மாணவனுக்காக வாதாடும் போது அவர்மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறார்) . 

6)மதிப்பிற்குரிய அரசர் (தந்து தந்தையின் மீதுள்ள அன்பையும் பாட்டியின் வஞ்சனைகளை உணர்ந்து ,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதி கூறாமல்,உண்மைக்கு செவி கொடுக்கிறார்,திறமை சாலிகளை மதித்து,அவர்களின் ஓவியத் திறமையினைக் கொண்டு  செம்மையான  ஆட்சி எப்படி செய்கிறார் என்பது நமக்கு புதுசு தான்).

  இது போக ஓவியப்பள்ளியில் நண்பர்கள் கூட்டம்,பொறாமை படும் கூட்டம் என்று பல வகை அரசியல்களை (திறமை சாலிகள் எப்படி அமுக்கப்படுகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள்.

இந்த படத்தினால் கதாசிரியரையும் ,அதற்கு மெனக்கட்டு உயிர் தந்த இயக்குனரையும் ,வாழ்ந்திருக்கும் நடிகர்களையும்,அட்டகாசமான பின்னணி இசையும்,பிரமிப்பூட்டும் ஓவியங்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .

காலத்தால் அழியாத காவியமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை !

கலை ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் !

தரவிறக்கம் செய்ய 

http://www.dramaload.com/korean-drama-the-painter-of-the-wind/

!

 

அன்பே ரணம்! அன்பே மருந்து !

October 4, 2010
http://www.cornell.edu/img/alumni/oldFriends-355x237.jpg
நட்பின் பொய்மையில்
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை மிச்சமிருக்குது .....

சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு!

நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ!

தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்!

எனதுயரம் துடைக்காட்டியும் 
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற!

ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே!

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே!

அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான்  மகிழ்ச்சியாய்  வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி  நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே !

நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு!

இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாரு ஒருநாள்

பொண்டாட்டி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாரு!

உன் பழங்கதைகள்
சொல்லி மகிழ
பேரன் பேத்தி
கெடச்சாலும் இந்த
நண்பன்ட  சொல்லிமகிழ
ஓராயிரம் கதை
இருக்கும் உனக்கு
வயசு திரும்ப
ஆசை பிறக்கும்
இன்னொரு ஜென்மம்
போதாது நீ நினைப்ப !

நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!
உன் தோழமையில் நனைந்திடவே !
 

பெண் சிசுக்கொலை- தீர்வுதான் என்ன?

July 31, 2010
ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால் ,அதை அழிக்க துணிகின்றனர் பெற்றோர்.இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன?பெண்ணென்ன ? பெற்ற மனம் தான் என்ன ? .அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும்,மூட நம்பிக்கைகளும் மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது .இதே சமுதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது , இதே சமுதாயம் தான் மொழி நாடு நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது .ஆனாலும் ஏனிந்த பாகுபாடு ?.அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும் நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள் ,இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர் தாய் கருப்பையிலேயே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர் .இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன ?எங்கே இந்த நஞ்சு விதிக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.

பெண் சிசுக்கொலைக்காக கூறப்படும் காரணங்கள்

"என்ன பெண் குழந்தையா?எப்படி கட்டிக்கொடுக்க போகுற ? "போன்ற சமுதயாத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன .மேலும் நமது சமுதாய நம்பிக்கையின் படி ஆணை மட்டுமே குடும்ப வாரிசாகவும் அவனுக்கே மட்டுமே பெற்றோர் இறந்தால் கொள்ளிவைக்கும் நிலைமையும் இருக்கின்றது . வரதட்சணைப் பழக்கத்தால் மகளென்றால் செலவு என்றும்,மகனென்றால் வரவு என்றும் நினைக்கின்றனர்.இது போன்று ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன .

பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்

கிழக்காசிய நாடுகளான இந்தியா ,சீனா,திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது.ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும்.அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது ,நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது.ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன .மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020- இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் சைனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்குஅதிகமாகவே இருப்பார்.நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது .இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன.மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது.கருக்கலைப்பு செய்யும் பொழுதும் ,பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும்.உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.

பெண் சிசுக்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் - ஒரு ஆய்வு

பெண் சிசுகொலையின் தீவிரத்தை உணர்ந்த அரசு விழித்துக்கொண்டது . வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம்- 1961 அமலில் உள்ளது . இருப்பினும் அனைத்து ஆண்களும் தாங்கள் "வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோம்" என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் .

அடுத்து கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT act -1994 .மெத்தப்படித்த மகப்பேறு மருத்துவர்கள் தொழில் போட்டிக் காரணாமாகவும் பண ஆசையினாலும் கருவை அழிக்க துணிகின்றன.இதில் பெண் மருத்துவர்களும் அடங்குவர் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய செய்தி

மேலும் பெண் சிசுக்கொலை கண்டறியப்பட்டால் குறைந்தபட்ச தண்டனைப் பதினான்கு ஆண்டுகள் தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் கிடைக்கும் .உடந்தையாய் இருந்தவர்களுக்கும் கொலைக்கு தூண்டியவர்கள் என்று கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ஆய்வுக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுவதுடன் அபராதத் தொகையுடன் கூடிய தண்டனைகளும் தரப்படுகின்றன .ஆனாலும் பல உண்மைகள் மருத்துவமனைகளிலும் ,ஆய்வுக்கூடங்களிலும் மூடிமறைக்கப்படுகின்றன.நமது அரசு இந்த விசயத்தில் பாரா முகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

'தொட்டில் குழந்தைத் திட்டம்' மூலம் சிசுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது தமிழக அரசு .இதைப் பின்பற்றி கேரளாவும் 'அம்மா தொட்டில்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது .இதனால் சிசுக்கள் கொல்லப்படுவதும் குப்பைத்தொட்டியில் தெருநாய்களுக்கு இரையாவதும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது .இருப்பினும் பல தாய்மார்கள் குழந்தையை கொன்றாலும் பரவாயில்லை.தத்துகொடுக்கமாட்டேன் என்று அறியாமை இருளிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.

பெண் கல்விக்கும் உரிமைக்கும் ஆதரவான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன .இது சரியாக மக்களைப் போய்ச்சேர அரசு ஆவணம் செய்யவேண்டும்.கிராமத்து பெண்களுக்குத் தங்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு பெறவேண்டும்.குழந்தை இல்லாத தம்பதியினர் 'பெண் குழந்தைகளைத்' தத்தெடுக்க முன்வரவேண்டும்.

சாதிச் சங்கங்களினால் இந்த புரட்சியை செய்ய முடியும்.தத்தமது சாதிகளில் பெண் வீட்டார் அளவுக்கு அதிகமாக அதிக நகைகள் மற்றும் பொருட்கள் தந்து திருமணம் புரிவதைக் கண்டிக்கவேண்டும் .

பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கிடைக்கும் மனவலிமையையும் பொருளாதார மேன்மையையும் ஊடகங்கள் மூலமாக அறியச்செய்யவேண்டும். கைம்பெண்,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இது ஒரு ஊன்றுகோலாய் அமையும். இதனால் கிடைக்கபோகும் பயன் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல.இந்த சமுதாயமே உயர்வை நோக்கி செல்ல உதவும் .அரசு வேலைகளிலும் ,தேர்வுகளிலும் முக்கியமாக குடிமைப்பணிகளுக்கு பெண்ணுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அறியச்செய்ய வேண்டும் .சில தனியார் நிறுவனங்களும் பெருஞ்சேவை நோக்கத்துடன் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் , திறமையுணர்ந்து பதவி உயர்வுகள் கொடுக்கின்றனர்.

கொலைபுறிவோம் அவலத்தை

மேற்கூறியவற்றை பயன்படுத்திக்கொண்டாலே போதும்.இனி மண்ணில் உதிக்கும் பெண்மணிகளைப்பார்த்து இந்த பாரே பாடும் " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா".

இனி கொள்ளிவைக்க ஒரு மகன் இல்லையே என்று புலம்புவது அர்த்தமற்றது .பெண்களும் பெற்றோரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் நடைமுறை என்றோ வந்துவிட்டது . தன்னை வாழவைக்க பெண் பிள்ளை இல்லையே! என்று வருத்தப்படும் காலம் வந்துவிட்டது .

சட்டங்கள் மட்டும் வந்தால் போதுமா ?

ஆண்களே !உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்கப் பழகுங்கள் ,சகப்பணியாளரிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள், போகப்பொருளாய் பெண்டியரைப் பார்ப்பதை மறவுங்கள் ,உயர்ந்து வரும் பெண்மணிகளை எள்ளி நகையாடுவதை நிறுத்துங்கள் .கைகொடுத்து மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்.

பெண்மணிகளே! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா ? கயமை குணத்தை விட்டொழியுங்கள்.உங்கள் இறப்பிற்குப்பிறக்கும் உங்கள் தாய்மை குணம் போற்றப்படும் .பெண்ணின் மகத்தான சக்தியை உணருங்கள்.தவறாக பயன் படுத்தாதீர்கள். கல்வியால் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததியினரையே வழிநடத்தி செல்லும்.பெண் சிசுக்கொலை என்ற வார்த்தை அகராதியிலிருந்து அழிக்கப்படும் நாள் வெகுதூரமில்லை .
 

இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

July 31, 2010
இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கையின் படி பதிமூன்று வயது முதல் முப்பத்தியைந்து வயது உட்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கப் படுகின்றனர் .இதில் இருபாலர்களும் அடக்கம்.அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபத்தி ஆறு சதவிகிதம் இளைஞர்கள் தான். மக்கள் வளத்தில் சீனா இந்தியாவை விட முதன்மையாக இருந்தாலும் , அவர்களைவிட அதிக இளைஞர் சக்தியைக் கொண்டது இந்தியா .நேற்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்களை ஒழுங்காக வழி நடத்திச் செல்கின்றனரா?புதிய கலாச்சாரத்தினாலும் ,தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் இன்றைய இளைஞர்கள் அபரிமிதமாக முன்னேறி உள்ளனரா ?அல்லது திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனரா ? என்று காண்போம்

கல்விநிலை

பெற்றோர்கள் மற்றும் ஆசிரயர்களின் கவனிப்பில் இருக்கும் பருவம் பதிமூன்று வயது முதல் இருபது வயது வரை .இந்த பருவத்தில் அவன்/அவள் பார்க்கும் மற்றும் கற்கும் விஷயத்தைப் பொறுத்துதான் வெறும் களிமண்ணாக மாறப்போகிறார்களா ?அல்லது சிறந்த ஒரு பாத்திரமாக மாறப்போகிறார்களா? என்று நிர்ணயிக்கப்படுகிறது.அவர்களது திறமையைக் கண்டறிந்து ஊக்குவிப்பதும் ,சிறந்த வழிகாட்டுதலும் இன்றைய மன்னர்களின் கைகளில் தான் இருக்கிறது .அவர்களது அறிவுப்பசிக்கு தீனிபோட தகுதியுடையவர்களாய் இருக்கவேண்டும்.இன்றைய மாணாக்கர்களின் அறிவு அபரிமிதமானது ...நிச்சயம் அவர்களது அறிவுத்திறன் முந்தைய தலைமுறையை விட வளர்ந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் .கலை ,அறிவியல் என்று பல்வேறு துறையில் சராசரி அளவைவிட பிராகசிக்கின்றனர் .இதற்கு காரணம் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், தொலைக்காட்சி,இணையதளம் என்று பல காரணங்கள் உண்டு.இதில் கிராமப்புறம் நகரப்புறம் என்ற சுவரு மெல்லிய தாகிக் கொண்டே போகிறது.

பண்பு

ஆனால் பண்பு .மனிதம் போன்ற விஷயங்களும் மலிவாகிக் கொண்டே போகின்றது .பெரியோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்த மரியாதை தேய்ந்து கொண்டே வருகிறது.சின்னத்திரை,பெரியத்திரை மற்றும் ஊடகங்கள் ஒருவகையில் அவர்களை வளர்த்தாலும் இன்னொரு வகையில் சீரழித்துக் கொண்டுதான் இருக்கின்றன.திரும்பும் பக்கமெல்லாம் பாலியல் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை.பதினான்கு வயது மாணவன் மாணவியைக் கற்பழிக்கிறான்.இன்னொரு பக்கம் பாலியலறிவு இல்லாததால் சிறார்கள் பாலியல் வக்கிரங்களுக்கு பலியாகின்றனர் .இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன வென்றால். சினிமா,இணையதள வக்கிரங்கள் அனைத்தையும் உருவாக்குபவர்கள் நேற்றைய தரம் கேட்ட மன்னர்களே .பணம் புகழ் ஒன்றே பிராதானம் ஆகிவிட்டது ,நீதியும் நேர்மையும் மங்கிவிடத் தொடங்கிவிட்டது.மறுபுறம் அப்துல்கலாம் ,அண்ணாதுரை சாமி போன்றோர்களின் வழிகாட்டுதல் இன்றைய இளைஞர்களுக்கு இன்றி அமையாத சக்தி.

ஏட்டுக்கல்வி

இதற்கு தீர்வுதான் என்ன மாணவர்கள் பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் கண்காணிக்கப்படவேண்டும்.வெறும் மதிப்பெண் எடுக்க கற்றுத் கூடாது .அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட கற்றுக்கொடுக்க வேண்டும்.இன்றைய இளைஞர்கள் உடனடி வெற்றிக்குத்தான் ஏங்குகிறார்கள்,தோல்வியை சந்திக்க திடமில்லை.தற்கொலைகள் ,காழ்ப்புணர்ச்சி ,ஏன் ?சக மாணவனைக் கொலை செய்யக்கூட துணிந்து விடுகின்றனர்.மீறினால் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி முடங்கிப்போய் விடுகின்றனர் .ஐ .ஐ. டி மாணவன் தற்கொலை செய்துகொள்கிறான் ஒரு சிறு தோல்வியை சந்திக்க முடியாமல்,கல்வி ஒருவனை விளைநிலமாக்க வேண்டும் ,பண்படுத்த வேண்டும் ,தரிசாக்கக் கூடாது.பாலியல் விழிப்புணர்வு சரியான அளவில் புகட்டப்படவேண்டும்.வாழ்வை எதிர்கொள்ள திடமான மன உறுதியைப் பெற்றுத் தந்திடவேண்டும் .உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் நம் பங்களிப்பு குறைவாகைருக்கிறது.இதற்கு காரணம் புத்தகப்புழுவாய் மாணவர்கள் இருப்பதே காரணம்.ஒலிம்பிக் முதலிய சர்வதேச போட்டிகளில் நம் இளைஞர்களின் தரம் உயரவேண்டும்

வேலை

இருபது வயதுக்குமேல் குடும்பப்பொறுப்பை ஏற்கத் தயாராகிறான் இளைஞன் . நேற்றைய மன்னர்கள் ஓய்வு பெரும் வயதில் வாங்கிய சம்பளத்தில் இன்றைய இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் மிக எளிதாக வாங்கிவிடுகின்றனர் .அமேரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இந்திய இளைஞர்களின் கொடிதான் பறக்கிறது .இது ஒரு வகையில் தலைநிமிர்த்த கூடிய விஷயம் என்றாலும் கல்பனா சாவ்லா போன்றவர்கள் தாய்நாட்டில் கிடைக்காத ஊக்குவிப்பை அங்கு கண்டதால் தான் வேறு நாட்டுக்காக உழைக்கின்றனர் என்ற எதார்த்தத்தை உணர் வேண்டும் .கல்விமுதலான உதவிகளை தாய் நாட்டில் பெற்றுவிட்டு வெளிநாட்டிற்காக உழைக்கின்றனர்.உலகமே கிராமமாக ஆன பிறகு இது தவிர்க்க முடியாது .அதனால் அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல் அங்கு சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்யலாம்.இதனால் இந்திய விவசாயம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி மேம்படும் ,பொருளாதாரம் உயரும் .

வாய்ப்புகள்

இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் ,இதற்காக அரசு ( நேரு யுவ கேந்தரா ) பல முயற்சிகளை எடுத்து வருகிறது.சுய தொழிலில் இளைஞர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி . இந்த தருணத்தில் இளைஞிகளின் நிலைமையையும் பார்க்க வேண்டும்

பள்ளி கல்லூரிவரை முதலிடத்தில் இருக்கும் மாணவியர் ,சமுதாய கோட்பாடுகளினால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர்.பல்வேறு துறைகளில் இன்று பெண்கள் அதிகமாக பங்கெடுத்தாலும் ,ஆண்களை ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது தலைமைப் பதவிகளில் இவர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் காண முடியும் .ஏன் திறமையில்லையா? இல்லை ஆண் பெண் என்ற கண்ணாடித்திரை தடுக்கிறது.ஆண்கள் பெண்களையும் மேலே வர விட வேண்டும்.ஏனென்றால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.தலைமைப் பொறுப்புகளில் ஆண்களுக்கு நிகராக சுடர் விடுகின்றனர்.

அதீத பணப்புழக்கத்தால் பாலியல் கொடுமைகளும் சீர்கேடுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன .பன்னாட்டு நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் இளைஞர்கள் அறம் தவறுகின்றனர்.இரவு நேரங்களில் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பில்லை.சுதந்திரம் கிடைத்து என்ன பயன்?.முதியோரில்லத்தில் பெற்றோர்கள்,தன பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்க மட்டும் பிள்ளைகளால் வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லப்படும் பாட்டிமார்கள்.(வெளிநாட்டில் ஆயா வேலைக்கு அதிக பணம் கேட்கிறார்களாம் ).இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன் ? நன்றி மறந்தோருக்கு,பாசம் கொல்வோர்க்கு. வாழக்கை வேகத்தில் மனிதத்தை மறக்காதீர்கள்.

நாளைய மன்னர்களே!

மேதகு இளைஞர்களே! இந்த நாடே உங்கள் கையில் தான்!.ஆரோக்யமான போட்டி நமக்குள் மட்டுமல்ல,ஆண்டிப்பட்டியில் பிறந்தவனுக்கும் அட்லாண்டாவில் பிறந்தவனுக்கும் இருக்க வேண்டும் ,உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் .சிந்தனைகளும் கனவுகளும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் .ஆரியபட்டா ,சாணக்கியர் ,விவேகானந்தர் ,அப்துல் கலாம் ,சி.வி ராமன் பிறந்த நாடு நம் நாடு.தொன்மை நிறைந்த யோகாவும் ,மருத்துவங்களும், நீதி நெறி தந்த திருக்குறள் முதலிய நூல்களை உருவாக்கிய செல்வ நாடு.இயற்கைவளங்கள் கொழிக்கும் கவின் நாடு நம் நாடு.பாரதி சொன்னது போல் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைக் கற்போம்".வழிகாட்ட எத்தனையோ விளக்குள் சுடர்விட்டுக் காத்துக் கொண்டு இருக்கின்றன.அதைக்கொண்டு கல்லாமை,இல்லாமை, ஊழல் போன்ற இருளினைக் கொளுத்துவோம்.உலக அரங்கில் அனைத்து துறைகளிலும் நீங்களே மன்னர்கள் !தோள்கொடுப்போம் !கலாச்சாரம் காப்போம் ,மனிதம் வளர்ப்போம் தொன்மையினை சிதைக்காமல் இருப்போம்."ஒற்றுமையே வலிமை !" மறவோம். இன்றைய இளைஞர்கள் எழுந்து விட்டார்கள் !விழித்து விட்டார்கள் !
 

கயல்விழி-1

June 24, 2010
.அக்டோபர் வரைக்கும் காத்திருக்கணும்

:)

எனது முதல் சிறுகதை இங்கே
!!!!!
 

தேய்பிறை!

June 20, 2010
தேய்பிறை!
பதினாறு வயதில் எழுதியது !இன்றளவும் இந்த கவிதைக்கு ஒரு தனி இடமுண்டு எனது மனதில் !!
 

மாயச் சிறகு!

June 19, 2010
http://fc07.deviantart.net/fs19/f/2007/242/d/a/FireWings_by_WhiteRaven90.jpg
வாழ்க்கைப் பயணமிது
சிறகுகள் தேவைப்படுகிறது
ஒவ்வொருதருனத்திலும்
ஒவ்வொருவிதமாக.....

கதகதப்பில் அரவணைக்கப்பட்டுகிடக்க
வலுசேர்த்து மேலும்பறக்க
மிதியடியாய் சிலநேரம்
கனவுகளாய் சாமரம்வீச ....

தாய் தகப்பனிடம்
கூட்டுக்குள் கிடைக்கும்
சகோதர பாசத்தில்
பங்கு கொள்ளும்
ரத்தமெனும் சிறகு!

உற்றார்
உறவினரிடம்
தோப்புக்குள் கிடைக்கும்
பந்த பாசத்தில்
தழுவிக்
கொள்ளும்
சொந்தமெனும் சிறகு!


வகுப்பறைத் தோழனென
கூடத்தில் கிடைக்கும்
தோள் சாய்ந்து
கற்கும் நன்றாய்
தோழமைச் சிறகு

கண்கள்திறக்கும் ஆசானின்
கரும்பலகையில் கிடைக்கும்
ஏட்டில் ஏறும்
சபையில் ஏற்றும்
ஞியானச் சிறகு !

ஹார்மோன்சுரக்க காதலியின்
பார்வையில் கிடைக்கும்
இதயம் இடமாறும்
கவிகள்பல பாடும்
காதல் சிறகு!

பட்டுத்திருந்தும் சகமனிதன்
சறுக்கலில் கிடைக்கும்
பாடாய் படுத்தும்
படைத் தீட்டும்
அனுபவச் சிறகு!

அணைப்பில் மனைவி
குழந்தைக் கிடைக்கும்
எதிர்பார்ப்பின் உருவம்
அடையாளம் மாற்றும்
பொறுப்புச் சிறகு!

பூங்காபெஞ்சில் சிநேகம்
அர்த்தம் கிடைக்கும்
அசைபோட வைக்கும்
பேரனை கொஞ்சிமகிழும்
முதுமைச் சிறகு !

ஒப்பாரி இசை
அமைதி கிடைக்கும்
மரணம் புரிபடும்
காடுபோய் சேர்க்கும்
மாயச் சிறகு!

 

கட்டளை!

June 2, 2010

மெல்லிய சாரலை மழையாகச் சொல்லி
கட்டளையிட்டது மண்வாசம்.............

இருள்நிலவை வல்லிய சூரியனாக்கசொல்லி
கட்டளையிட்டது  பனித்துளி..............

மண்ணில் சேர்ந்ததையெல்லாம் வளமாக்கசொல்லி
கட்டளையிட்டது உயிர்க்குலம்.........

தலைவன் கட்டளைக்கு வழிநடப்பைவகளோ?

மழைநீர்  பூமியை நனைத்துவிட்டது
சூரியஒளி  வானை  நிறைத்துவிட்டது
உயிர்க்குலம் செழிப்பை விதைத்துவிட்டது !


தலைவன் முதற்றே உலகு!





 
 

Minpen/Nilasahe

Minpakkangal
Madurai
Minpakkangal

Make a free website with Yola