எல்லை

May 29, 2010
http://tomwhelan.files.wordpress.com/2008/08/img_0104_2watersa.jpg

இந்த மழைத்துளி
 நதிமீது வட்டம் போட்டு தனது
எல்லையைச் சொன்னாலும்
அதே வட்டத்துக்குள்
வந்துசேரும் அடுத்த
மழைத்துளியைத் தனது
சொந்தமாய் ஏற்றுக்கொள்கிறது
அதனால் நதிவறண்டு போவதில்லை
ஏற்றுக்கொள்ளாமல் இருக்குது
மனிதஇனம்....உலகம்
வறண்டுபோகப்போகிறது



 

மென்மையான மலர்

May 29, 2010
http://lcassorla.home.comcast.net/~lcassorla/blog/uploaded_images/Bleeding_Heart_1-745862.jpg



உலகின் மென்மையான
 மலர் தேடி கிடைக்காமல்
மெல்லிய வார்த்தைகளைக்
 கவிதையாக கோர்த்து
அவளிடம் காதல் சொன்னேன்
...அதிசயம்  இப்பொழுது உலகின்
 மென்மையான மலர்
 என்னிடம் தான் இருக்கு
உலகின் மென்மையான மலர்
அவள் இதயம் அல்லவா !
 

இயற்கை அன்னை!

May 29, 2010
http://ih2.redbubble.net/work.1301589.3.flat,550x550,075,f.sun-rays-in-morning-forest.jpg

இரவெல்லாம் பனியில்
 குளித்த காட்டுக்கு 
 சூரியத் தூவாளைக்கொண்டு
துவட்டுகின்றாளோ?
இயற்கை அன்னை  !

 

இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு!

May 28, 2010
http://thumb2.visualizeus.com/thumbs/09/07/02/daisy,dew,drops,flower,flower,petals,nature,yellow-31c81bf94e02565f085850216d3034ef_m.jpg


இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ....
நேற்றைய இரவும் இருளைப் பார்த்து அச்சம் கொண்டதோ ?


இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
..நேற்றிரவு நல்ல நிலா குளியலோ ?


இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு....
 த
ன் பிள்ளை மொட்டுக்கள் சுகமாய் தூங்க இரவெல்லாம் இவள் விழித்திருந்திருபாளோ?

இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு...
தான் நாளை உதிர்க்கபடுவதாய் கொடிய கனா கண்டிருப்பாளோ?


இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு...
காலைச் சூரியன் முத்தம் தந்ததோ பட்டு இதழுக்கு
?

இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
எந்த வண்டு உன்னைக் கடித்து வைத்தது
?

இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
தன் அழகுக்கு போட்டியாய் நிலாப்பெண் அவளைக் கண்டுதானோ?

 

மனைவி !

April 27, 2010

http://betsydevine.com/blog/pictures/MoonFlip.gif
ஊதாரியாய் பகல் முழுதும் செலவழித்து
உலக குடுமபத்தை கைவிட்டு
மறையும் சூரிய கணவன்
சேமித்து வைத்து இருளிலும்
ஒளி தருகிறாள் நிலா
மனைவி !
 

தவறாக குறிக்கபட்ட ஆயுள்?

April 21, 2010
http://cdn.wn.com/ph/img/65/19/a45c0bb346a3e9bf1def8e3801ad-grande.jpg

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை
நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை
சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன்
என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண
வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள்
தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம்
பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள்
கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம்
உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில்
வாழமுடியுமா?


வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்



அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு
என்கிறாள்


நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட
ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல்
பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன்
நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை
விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன்
இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய்
விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???
 

காதல் யாசிக்கிறேன்!

April 4, 2010

இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன் காதல்

எனை விட்டு பிரியாதே

கோபத்தில் சொன்ன
வார்த்தைகள் வருந்தி
அழைக்கிறேன்
என் கணவனே ....

என் கரம்
பற்றிய அந்நாளே
நான் நீயாகி போனேன்!

மணமுடிக்கும் முன்
நான் நினைத்தேன்
விட்டுகொடுப்பது தான் வாழ்க்கை!

இப்பொழுது ஏனோ
உன்னை விட்டுகொடுக்க
மனம் இயலவில்லை எனக்கு?

உன் பேச்சை
ரசிக்க ரசிக்க
வாழ்நாள் போதாது எனக்கு

என் வார்த்தைகள்
கேட்க நீ
வெறுத்து போனது ஏனோ?

நீ ரசித்த
பெண்களை எல்லாம்
நான் ரசிக்க பழகியும்

எனை ரசிக்க
நீ குறைத்து கொண்டது
ஏனோ அழுத்து விட்டதா?

உன் பெற்றோர்களை
உன்னை என்னிடம்
தந்த தெய்வங்களென வணங்கினேன்

என்னை பெற்றவர்கள்
முன்பாவது எனை
நேசிப்பது போல் நடித்திருக்கலாம்!

காலையில் காபி
தராவிட்டால் வருகிறது
கொலை செய்ததுபோல் கோபம்

தாலி கட்டியவளுக்கு
காதல் எதற்கு?
நினைத்தால் நான் பாவம்

தங்கத்தில் பரிசா
கேட்டேன் மனதில்
தங்க இடம்தானே கேட்டேன் ...

இந்த திருமண
பந்தமெதற்கு மனிதனுக்கு
அன்புக்காய் வேண்டி தானே?

அந்த அன்பும்
காதலும் இருக்கு
தெரியும் எனக்கு கிடைக்காமல்...

ஏன் தயக்கம்
முத்தமிடும் பொழுது
காண்பிப்பது வெறும் போலியா?

இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன் காதல்....


குறையுமுன் பழைய
காதல் புதுப்பிக்க
வா நித்தம் நித்தம் !
 

தாஜ்மஹால் கட்டியவன்

March 20, 2010
http://craziestgadgets.com/wp-content/uploads/2009/03/lego-taj-mahal.jpg


நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல !

நான் உனக்காக எழுதிய கவிதை எதுவும்
உன் பார்வைக்கு இன்னும் சேரவில்லை...

நட்புக்கு பரிசாய் நண்பர்கள் அள்ளிச்செல்வார்கள்
அவர்கள் எழுதியதாய் காதலியிடம் சொல்ல..
நகைப்புடனே ஆனந்தம் கொள்வேன் உனைநினைத்து...

காதலர் தினத்தில் பச்சை சட்டையணியும்
நண்பன் சொல்வான் நீ அணியவில்லையா ...?

உன்னை நான் எங்காவது கண்டிருக்கலாம்
இல்லை இனிமேல் கூட சந்திக்கலாம்...

எனக்கு பிடித்த அம்மாவின் ஜாடையில்
நீ இருக்கலாம்  கனவுகளை காதலித்தேன்...

அழகிய கவிதைகள் உனக்காய் புனைகிறேன்
நண்பர்கள் காதலுக்கு அவை உரமாயின...

கவிதைகளினால் புண்ணியம் சேர்க்கிறேன் காதலுக்கு

நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல!
 

சூரியனை எரிக்கும் விழா!

February 24, 2010

sun

சூரியனை எரிக்கும் விழா!

வானப் பறவைகளுடன் திட்டம்

பீனிக்ஷ்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கடிக்கப்பட்ட நெருப்புத் துண்டுகள்!

இன்று அவனையே தாக்கும்!

கத்தி எடுத்தவனுக்கோ   கத்தியில் சாவு

நெருப்பை எடுத்தவனுக்கோ இன்று நெருப்பால்!

தேகம் எரிக்கும் மேனி இன்று கங்குகளால்  சுடப்பட வேண்டும்!

இல்லை அண்டார்டிகா கடலில் நனைத்திட வேண்டும்!

அண்ட வெளிக்குள் கால்பந்தாய் உதைத்திட வேண்டும்!

தெர்மாமீட்டர் வைத்து வெப்பம் அளந்து ஊசிபூட வேண்டும்!

கையில் இருக்கும் குடையால் எட்டி அடிக்க வேண்டும்!

இப்படியெல்லாம் எண்ணம் வந்தது இன்று மதியம்!

தோழி ஒருத்தி ஐய்யோ  வெயிலென்று முகம் சுழிக்கையிலே!

 

சூரிய முத்தம்

February 24, 2010
http://i755.photobucket.com/albums/xx199/cali_g93/th548318g7mw6q1do9.gif

இன்றும் வானம் வெயிலில் கிடந்து
கருத்து போன வேளை அது
இன்றும் நானும் நிலவும் சந்தித்து
கொள்ள முடிவெடுத்த இனிய கணம்
என்னவள் நிலவுக்கு நான் வாங்கித்தரும்
ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரியம்
இரவெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டே சிந்தும்
கொஞ்சம் ஐஸ்க்ரீம்பனி எனக்கு சுவர்க்கம்
அவளும் என்னை சுற்றிவரும் நேரம்
காதல் வளரும் தேயும் நிழலாய்
அவள் உலா வரும் பொழுது
அவள் ஆடையிலிருந்து சிதறும்
நட்சத்திர கற்களை பொருக்க ஒரு
கள்ள மேக கூட்டங்கள் தொடரும்
சிலநேரம் சிறை பிடிக்கும் இன்றும்
நான் காப்பாற்ற முத்தம் தருவாள்
சூரிய முத்தம் !சூடான முத்தம்!
 
 

Minpen/Nilasahe

Minpakkangal
Madurai
Minpakkangal

Make a free website with Yola