http://www.cornell.edu/img/alumni/oldFriends-355x237.jpg
நட்பின் பொய்மையில்
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை மிச்சமிருக்குது .....

சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு!

நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ!

தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்!

எனதுயரம் துடைக்காட்டியும் 
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற!

ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே!

சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே!

அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான்  மகிழ்ச்சியாய்  வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி  நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே !

நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு!

இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாரு ஒருநாள்

பொண்டாட்டி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாரு!

உன் பழங்கதைகள்
சொல்லி மகிழ
பேரன் பேத்தி
கெடச்சாலும் இந்த
நண்பன்ட  சொல்லிமகிழ
ஓராயிரம் கதை
இருக்கும் உனக்கு
வயசு திரும்ப
ஆசை பிறக்கும்
இன்னொரு ஜென்மம்
போதாது நீ நினைப்ப !

நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!
உன் தோழமையில் நனைந்திடவே !