கரம் பிடிக்கிறேன் உன்னை!

February 17, 2010
http://www.worldsgreatesthoneymoons.com/images/i-Destinations/USA/East%20Coast/Cape%20Cod/Couple%20at%20sunset.jpg

கரம் பிடிக்கிறேன் உன்னை
எனை விட உயிரம்
குறைவுதான் நீ பெண்ணே
ஆனாலும் எனை நீ
மேலும் மேலும் உயர்த்துகிறாய்!

கரம் பிடிக்கிறேன் உன்னை
உன் பார்வை கண்டவேளையிலே
உன் கனவுகள் அறிகிறேன்
உடனடியாக நிறைவேற்ற துடிக்கிறேன்
என்மீதுள்ள உன்னம்பிக்கை உணர்கிறேன்!

கரம் பிடிக்கிறேன் உன்னை!
கதிரவன் மடி சாய
 கடல் காதலி இருக்கிறாள்
நான் மடிசாய இன்னொருதாயாய்
நீ மட்டும் அன்பே!


கரம் பிடிக்கிறேன் உன்னை!
இந்த கரைக்கு முத்தம் தர
இந்த கடலலை முயற்சிக்கிறது
பாரேன் அதை நாம்......
கரம் பிடிக்கிறேன் அன்பே!
 

இந்த பலூனுக்குள்!

February 15, 2010

உலகமே கள்ளுக்கடையில் என்று
வீடு மறந்த அப்பாவை
இன்றாவது பார்ப்பேனா ?
பொட்ட பிள்ளையா பொரந்திட்டியே
தினம் கண்கள் சிவக்கும் அம்மாவை
இன்றாவது சிரிக்க வைப்பேனா ?
ஏதோ டீக்கடையில்
வேலைபார்க்கும் அண்ணன்
எனக்காக கடலைஉருண்டை
இன்றாவது வாங்கிவருவானா ?
மதிய வேலை சத்துணவு
தம்பிக்கும் எடுத்து போக
இன்றாவது ஆயா விடுமோ?
என்று ஆயிரம் ஆயிரம்
கனவுகள் இருந்தாலும்
எனது இப்போதைய கனவு
இந்த பலூனுக்குள்!


பி கு...இந்த கவிதை வரிகளின் கருத்துகளுக்கும்...இந்த குழந்தைக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை

 

யாருமில்லை…

November 22, 2009

மலைச்சாரல்களில் …………………………
கவனக்கிப்பட்ட நொடிகளைப் பற்றிய கவிதைஇதோ
யாரும் விழிக்காத வேளையது
இருவர் மட்டும் விழிகள் மூடாது
கண்ணீர் குளங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்
நிலவின் வண்ணம் களைந்துதான் போயிருந்தது
இந்த பெண்ணின் கண்மையும் தான்
சொல்லப்போனால் காரணமும் ஒன்றுதான்…………
இருவருக்கும் கண்ணீர் துடைக்க யாருமில்லை…
 

காதல்மலர்

September 4, 2009



ஒரு திசை நோக்கி
செல்லும் காற்றுகள்
இரண்டும் இன்று
சந்தித்தன விதிவசத்தால்
மொழிகள்பேசி மகிழ்ந்தன
வழிகளையும் வலிகளையும்
தென்றல் வயது
இருவரையும் எட்டிபிடித்ததும்
இதோ கைகோர்த்து
மனம் கோர்த்து
காதல் மலர்
பறிக்க சேர்ந்து
அசைத்து பார்க்கின்றன
இதழ்களை மெதுவாய்!
 

நான் அடிமை

September 4, 2009

ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள்
எந்தன் நிமிடங்கள் விழுந்துகொண்டிருக்க
கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம்
தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய்
தெரியப்படுத்தாத விதி
தினந்தோரும் என்னைக்
காயப்படுத்துது அதையும் மீறி
ஏதோ ஒரு ஞானம் சேர்ந்துகொள்ளுது
சோம்பல் முறித்தப்பிறகாவது இல்லை
நீண்டன் நெடிய
உறக்கம் முடிந்தபிறகாவது
விடியல் வந்தபாடில்லை…
அடுத்த உறக்கத்திற்கு
அடிபோடுது மனம்
மறுபடியும் விழுங்கப்பாத்தது
புது புது கனவுகளுக்குள்
பிண்ணிகொள்ளுது கண்விழி
சூரியன் தலைமேல்
விழுந்தாலும் எள்ளளவும்
மனம் மாறவில்லை
கையில் கிடைக்கும்
கோப்பை தேநீரை
உதறி வெறுக்குது
இதோ எனது
தலையணை சிரிக்குது
என்னைப் பார்த்து
நான் தூக்கத்திற்கு
அடிமையாம்!!
 

உனையெழுத தலைப்பட்டேன்

September 4, 2009




நான் உனையெழுத
தலைப்பட்டேன் இன்று
வெள்ளைத் தாளில்
கருப்புமை அழகு
அதனால் என்னில்
உனையெழுத தலைப்பட்டேன்
இன்னும் ஒருபக்கம்
கூட முடியவில்லை
கனக்கிறது புத்தகம்
எனது மனதும்தான்

சில பிழைகள்
ஆங்காங்கே இங்கே
கண்ணீரால் அழிக்க
கூடாதென்று நினைத்தேன்
ஏனெனில் அருகில்உள்ள
நல்லேழுத்துகளும் அழியக்கூடும்
ரசிக்க மட்டுமே
கற்றுகொண்டேன் விரும்பி
ஆங்காங்கே காற்புள்ளிகள்
அடுத்த வரிக்கு
ஆயத்தம் ஆகின்றன
உனது குறும்புகள்
போல் தான்




உன் வல்லினஎழுத்துகளை
எழுதும் பொழுதுமட்டும்
கைகள் நடுங்குகிறது....
என் இடையினஎழுத்துகள்
வெட்கி மறைந்துகொள்ள
பார்க்குது இங்கும்.....
அதிசயம் என்னவெனில்
ம் எழுத்துமட்டும்
அழகாய் வருகிறது
நாம் நம்மிடம்
ரசிக்கும் எழுத்தல்லவா!

எங்கு வேண்டுமானாலும்
தேடிப்பார் கிடைக்காது
ஆயுதெழுத்தும் முற்றுபுள்ளியும்!
எழுதி முடிக்க
ஜென்மம் பலவாகும்
அதுவரை புத்தகத்தை
அட்டை போட்டு
காக்க தலைபட்டோம்.....
உனதுயிரையும் எனதுயிரையும்
சேர்த்து நன்றாக!


 

என் செல்ல அப்பாவிற்கு

September 4, 2009


அப்பா... அப்பா.... அப்பா.....
தும்மலிலும் நன்றி சொல்வேன்
தாயுமாகிய என் அப்பா!

நான் எட்டி உதைக்க
அம்மாவின் பிரசவகால வேதனையில்
என்னுடன் அம்மாவையும் அணைப்பாயாம்
நன்றி சொல்கிறேன் அப்பா!

ஊர் உலகம் சொல்லுமாம்
பொட்ட பிள்ளையா..... பாவம்
நீ சொல்வாயாம் என்
மகளல்ல என் தாயென்று
நன்றி சொல்கிறேன் அப்பா!

தவழ பழகின வேளையிலும்
என் கால்கள் வேதனை
படுமென பூக்கள் நிறைக்க
எண்ணம் கொண்டாயாம் ..சின்னமகள்
நன்றி சொல்கிறேன் அப்பா!

என் முதல் மழலைமொழி
அத்த...தை என நான்கூற
வாடிப்போனதாம் உன் மனசு
மறுகணமே உன்கன்னம் தடவி
அப்பா என்றுநான் அழைக்க
ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு
யானை சவாரியாம் உன்மேல்
நன்றி சொல்கிறேன் அப்பா!

நான் அழும்பொழுது கடிந்து
கொள்ளும் அம்மாவை கடிந்து
இரவு முழுவதும் தூங்காமல்
தொள் மீது நான்சாய
கனவுகள் பல காண்பாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

தினமும் வேலை செல்லும்
முன்பு தொட்டிலை விழக்கி
என் சிரிப்பு பார்த்துவிட்டு
செல்வாயாம் இன்றுவரை அப்படித்தான்
நன்றி சொல்கிறேன் அப்பா!

பள்ளி செல்ல அடம்பிடிக்க
மகள் சீமை செல்வதுபோல்
பெருமிதம் கொண்டு அன்றுமுதல்
என் கைப்பிடித்து கூட்டிசெல்வாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!


நண்பர்கள் பல கிடைக்க
எனதப்பா யார்னு தெரியுமா?
உனது பெருமை மட்டுமே
அவர்களிடம் நான் பேச
எனக்கு நெற்றியில் முத்தம்தருவாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

தூக்கம் வர கதைகேட்பேன்
உன்மேல் ஒய்யாரமாய் கால்போட்டு
நீ சொன்ன விலங்குகதைகள்
மனிதர்கள் உணரவைத்தது அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!

நான் பூப்படைந்த பொழுதும்
ஒரு மூலையில் அம்மா
அழுது கொண்டு இருக்க
நீதானே வந்து எனக்கு
தைரியம் ஊட்டினாய் சிரித்துக்கொண்டே
நன்றி சொல்கிறேன் அப்பா!


வெளியில் சென்றால் எப்பொழுதும்
தலை குனிந்து செல்
என ஊரார் குட்ட
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட
பார்வையும் என்று வீரம்
ஊட்டினாய் பண்பை ஏற்றினாய்
நன்றி சொல்கிறேன் அப்பா!

விளையாட்டாய் அம்மா சமைத்த
உணவை நான் செய்ததெனகூற
வாழ்வில் இப்படி ஒரு
சமையல் கண்டதில்லை எனமகிழ்ந்தாய்
நன்றி சொல்கிறேன் அப்பா! Razz

பட்டங்கள் நான் படிக்க
உன் முன்மாதிரி யாரென
கேட்க உன்பெயர் சொல்வேன்
அரங்கத்தில் தலை நிமிர
நன்றி சொல்கிறேன் அப்பா!

உற்ற தோழன் நீயிருக்க
கவலை என்ன எப்பொழுதும்?
எனக்கு கணவன் எப்படி
வேணுமென நீ கேட்பாய்
நான் சிரித்துகொண்டே உங்கள்
விருப்பம் என்று உரைப்பேன்!

உண்மையில் அப்பா எனக்கு
உன்னை மாதிரி கணவன்
வேண்டுவேன் கடவுளிடம் நித்தம்!
ராஜகுமாரனை கைப்பிடித்து கொடுக்க
அப்பா நீ இருக்க
கவலை எனக்கில்லை அப்பா!
நன்றி சொல்கிறேன் அப்பா!

நன்றி சொல்கிறேன் அப்பா!
இன்றும் நினைத்து கொள்கிறேன்
இன்னொரு ஜென்மும் நான்
உனக்கு அம்மாவாக வேண்டுமென்று!
 

மின்பக்கங்கள்

August 30, 2009




மின்பக்கங்களை வாசித்துபார்க்க வந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்
                      இங்கு என் எண்ணங்கள் என் ஆசைகள்  தமிழ் சொற்களாலும் ,படங்களாலும் வடிக்கப்பட்டுள்ளன!
 
 

Minpen/Nilasahe

Minpakkangal
Madurai
Minpakkangal

Make a free website with Yola