நான் உனையெழுத
தலைப்பட்டேன் இன்று
வெள்ளைத் தாளில்
கருப்புமை அழகு
அதனால் என்னில்
உனையெழுத தலைப்பட்டேன்
இன்னும் ஒருபக்கம்
கூட முடியவில்லை
கனக்கிறது புத்தகம்
எனது மனதும்தான்

சில பிழைகள்
ஆங்காங்கே இங்கே
கண்ணீரால் அழிக்க
கூடாதென்று நினைத்தேன்
ஏனெனில் அருகில்உள்ள
நல்லேழுத்துகளும் அழியக்கூடும்
ரசிக்க மட்டுமே
கற்றுகொண்டேன் விரும்பி
ஆங்காங்கே காற்புள்ளிகள்
அடுத்த வரிக்கு
ஆயத்தம் ஆகின்றன
உனது குறும்புகள்
போல் தான்




உன் வல்லினஎழுத்துகளை
எழுதும் பொழுதுமட்டும்
கைகள் நடுங்குகிறது....
என் இடையினஎழுத்துகள்
வெட்கி மறைந்துகொள்ள
பார்க்குது இங்கும்.....
அதிசயம் என்னவெனில்
ம் எழுத்துமட்டும்
அழகாய் வருகிறது
நாம் நம்மிடம்
ரசிக்கும் எழுத்தல்லவா!

எங்கு வேண்டுமானாலும்
தேடிப்பார் கிடைக்காது
ஆயுதெழுத்தும் முற்றுபுள்ளியும்!
எழுதி முடிக்க
ஜென்மம் பலவாகும்
அதுவரை புத்தகத்தை
அட்டை போட்டு
காக்க தலைபட்டோம்.....
உனதுயிரையும் எனதுயிரையும்
சேர்த்து நன்றாக!