இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ....
நேற்றைய
இரவும் இருளைப் பார்த்து அச்சம் கொண்டதோ ?இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
..நேற்றிரவு
நல்ல நிலா குளியலோ ?இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு....
தன் பிள்ளை
மொட்டுக்கள் சுகமாய் தூங்க இரவெல்லாம் இவள் விழித்திருந்திருபாளோ?
இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு...
தான் நாளை
உதிர்க்கபடுவதாய் கொடிய கனா கண்டிருப்பாளோ?
இப்படி வேர்த்திருக்கு இந்த
மலருக்கு...
காலைச் சூரியன் முத்தம் தந்ததோ பட்டு இதழுக்கு?
இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
எந்த
வண்டு உன்னைக் கடித்து வைத்தது?
இப்படி வேர்த்திருக்கு இந்த மலருக்கு ...
தன் அழகுக்கு
போட்டியாய் நிலாப்பெண் அவளைக் கண்டுதானோ?
In : Anbilthodangi
Tags:
மலருக்கு
kavithai
poem
tamil poem
flower
blog comments powered by