http://craziestgadgets.com/wp-content/uploads/2009/03/lego-taj-mahal.jpg


நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல !

நான் உனக்காக எழுதிய கவிதை எதுவும்
உன் பார்வைக்கு இன்னும் சேரவில்லை...

நட்புக்கு பரிசாய் நண்பர்கள் அள்ளிச்செல்வார்கள்
அவர்கள் எழுதியதாய் காதலியிடம் சொல்ல..
நகைப்புடனே ஆனந்தம் கொள்வேன் உனைநினைத்து...

காதலர் தினத்தில் பச்சை சட்டையணியும்
நண்பன் சொல்வான் நீ அணியவில்லையா ...?

உன்னை நான் எங்காவது கண்டிருக்கலாம்
இல்லை இனிமேல் கூட சந்திக்கலாம்...

எனக்கு பிடித்த அம்மாவின் ஜாடையில்
நீ இருக்கலாம்  கனவுகளை காதலித்தேன்...

அழகிய கவிதைகள் உனக்காய் புனைகிறேன்
நண்பர்கள் காதலுக்கு அவை உரமாயின...

கவிதைகளினால் புண்ணியம் சேர்க்கிறேன் காதலுக்கு

நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல!