உலகமே கள்ளுக்கடையில் என்று
வீடு மறந்த அப்பாவை
இன்றாவது பார்ப்பேனா ?
பொட்ட பிள்ளையா பொரந்திட்டியே
தினம் கண்கள் சிவக்கும் அம்மாவை
இன்றாவது சிரிக்க வைப்பேனா ?
ஏதோ டீக்கடையில்
வேலைபார்க்கும் அண்ணன்
எனக்காக கடலைஉருண்டை
இன்றாவது வாங்கிவருவானா ?
மதிய வேலை சத்துணவு
தம்பிக்கும் எடுத்து போக
இன்றாவது ஆயா விடுமோ?
என்று ஆயிரம் ஆயிரம்
கனவுகள் இருந்தாலும்
எனது இப்போதைய கனவு
இந்த பலூனுக்குள்!


பி கு...இந்த கவிதை வரிகளின் கருத்துகளுக்கும்...இந்த குழந்தைக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை