
இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன் காதல்
எனை விட்டு
பிரியாதே
கோபத்தில் சொன்ன
வார்த்தைகள் வருந்தி
அழைக்கிறேன்
என்
கணவனே ....
என் கரம்
பற்றிய அந்நாளே
நான் நீயாகி போனேன்!
மணமுடிக்கும்
முன்
நான் நினைத்தேன்
விட்டுகொடுப்பது தான் வாழ்க்கை!
இப்பொழுது
ஏனோ
உன்னை விட்டுகொடுக்க
மனம் இயலவில்லை எனக்கு?
உன் பேச்சை
ரசிக்க
ரசிக்க
வாழ்நாள் போதாது எனக்கு
என் வார்த்தைகள்
கேட்க நீ
வெறுத்து
போனது ஏனோ?
நீ ரசித்த
பெண்களை எல்லாம்
நான் ரசிக்க பழகியும்
எனை
ரசிக்க
நீ குறைத்து கொண்டது
ஏனோ அழுத்து விட்டதா?
உன்
பெற்றோர்களை
உன்னை என்னிடம்
தந்த தெய்வங்களென வணங்கினேன்
என்னை
பெற்றவர்கள்
முன்பாவது எனை
நேசிப்பது போல் நடித்திருக்கலாம்!
காலையில்
காபி
தராவிட்டால் வருகிறது
கொலை செய்ததுபோல் கோபம்
தாலி
கட்டியவளுக்கு
காதல் எதற்கு?
நினைத்தால் நான் பாவம்
தங்கத்தில் பரிசா
கேட்டேன் மனதில்
தங்க இடம்தானே கேட்டேன் ...
இந்த திருமண
பந்தமெதற்கு மனிதனுக்கு
அன்புக்காய்
வேண்டி தானே?
அந்த அன்பும்
காதலும் இருக்கு
தெரியும் எனக்கு
கிடைக்காமல்...
ஏன் தயக்கம்
முத்தமிடும் பொழுது
காண்பிப்பது
வெறும் போலியா?
இதயத்தில் நீ
என் ரத்தத்தில்
கலக்குமா உன்
காதல்....
குறையுமுன் பழைய
காதல் புதுப்பிக்க
வா நித்தம்
நித்தம் !